கார்காலம்.. தாய்மை

01.
கார்காலம்
------------------

நம்மில் யாரேனும்
ஒருவரையாவது
அனைத்து முத்தமிடமாட்டானா
என்று
சூரியனின் வருகைக்காக
தாமரைகள் காத்திருந்தபோது
முகிலவன் வந்து
தடுக்க முயன்றான்
மலர்களுக்குள்
சண்டை வருமென்று.

02.
தாய்மை
---------------

ஒக்கலில் இருத்தி
காக்கா கதைசொல்லி
காரியத்தை சாதித்தேன்

வாய்ப்புகுவது தெரியாமல்
வயிறு நிறைய உண்டுவிட்டு
குழந்தை சொன்னது
நரி நீ என்று!

அப்போதும்
அவள் மனம் மகிழ்ந்தது
குழந்தை தானே என்று!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-09-10 00:00
Share with others