- சாந்தி
இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ
என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள்
கவனக்குறைவால் தடுமாறிய உன்னை
முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து
உயிர் உடைத்தனர்...
சேலை வாங்க போன ஆத்தா
செத்துப்போனாள் எனச்சொல்ல
வெட்க்கமாகத்தான் இருக்கிறது...
நெருப்பில் உன்னுடல் எரிந்திருக்கையில் -உன்னை
மிதித்து வதைத்த கால்களுக்குச் சொந்தக்கார கண்கள்சில
நீரில் நனைந்திருக்கும்...
இதோ
எவரோ எறிந்துசென்ற சேலை
இதயமாய் கனக்கிறது என் கைகளில்
...ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்ய்ய்............ உன் மரணத்திற்கு பாதைவிரித்த
சேலையொன்றும் எனக்கு தேவையில்லை-எனவே
எறிகிறேன் சேலையை...எரியும் உன் பிணத்தின் மேலே...
ஒரு வேளை..
சேலையில் பற்றிக்கொண்ட
நெருப்பின் ஜுவாலையில்
இந்தியா ஒளிரக்கூடும்...
இன்னும் பிரகாசமாய்...!!!
----சாந்தி மனோகரன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30 00:00
சென்னையில்rnஜெயலலிதா ஆட்சிகளாலத்தில்rnநடந்த நாகழ்வைrnநினைவுபடுத்துகிறது