- சாந்தி
அரசியல்
நடைபாதையில் தடங்களாய் கிடக்கும்
சிறுபாறையை ஒதுக்கிப்போட
யோசித்து ஒதுங்கினேன்...
ஆளின்றி வழிந்தோடும் தெருக்குழாயை
மூடத்தோன்றாமல் கண்மூடி
கடந்து சென்றேன்...
பாதையை கடக்க குருடனொருவன்
உதவி கேட்கையில்
அவசரமாய் உதறித்தவிர்த்தேன்
சுமைதாங்காது உதவிக்காய் எதிர்பார்த்து
ஏங்கி நின்ற பெரியவர்கண்டு
எள்ளி நகையாடினேன்...
எனைப்பார்த்து
சரியாகத்தான் சொன்னான்
ஜோசியக்காரன்..!!
பின்னாளில்
பொதுசேவையில் ஈடுபட்டு
மக்களுக்கு சேவை செய்ய தேவைப்படும்
லட்சணங்கள் அனைத்தும்
கச்சிதமாய் பொருந்துவதாய்..!!!
-சாந்தி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
கவிதையின் முடிவில்rnபின்னீட்டீங்க போங்கrnஎதிர்பார்க்கா முடிவு