- இளங்கோ
என் பிரிய அக்காவிற்கு,
இன்றைய மகளிர்தினத்தில்
எனக்கு எல்லாவுமாகி நின்ற
உனக்கோர் மடல்வரைகின்றேன்
அம்மாக்களை அதட்டியொடுக்கும்
அப்பாக்களை அவதானித்தபடி..
பெண்களின் எழுச்சி நாளிதென்று
எவ்வாறு என்னாலெழுதமுடியும்?
என்னோடு அன்பாய்
பேசித்தி£¤ந்த தோழிகளை
நான்கு சுவருக்குள் உட்காரவைத்து
அவமானப்படுத்திய அகோரநாட்களை
எவ்வாறு நான் மறப்பேன்?
பெண்களின்
உடல் வனப்புத்தாண்டி
வியாபாரக்கவர்ச்சிகள் தவிர்த்து
சதையும், கோளமுமாய் சூழ்ந்து
துடிக்கும் இதயத்தின்
மெல்லிய அதிர்வுகள்
சிலவேளைகளில் எனக்குப்புரிகிறது
பூபாளமோ, முகாரியோ
விடுதலைக்கான பண்ணை
இவர்களே இசைக்கட்டும்
இன்றைய நாளில்
இவர்கள் எழுப்பும் உணர்வலைகள்
வான்முகடு தாண்டாவிட்டாலும்
அன்பானவர்களை அதட்டிவைத்திருக்கும்
சிலவீட்டுக்கதவுகளைச் சற்று
அதிரச்செய்தாலே போதும்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
உங்கள் வருத்தத்தையும் கவலையையும் பகிர்ந்த விதம் அருமை. அகண்ட வெளியில் நம் கருத்துக்கள் சந்தித்து கண்களைத் துடைத்துக் கொள்கின்றன!