அந்தப் பந்தயம்.. நரகமாய்.. கிழிந்தது
01.
அந்தப் பந்தயம்...
---------------------
மரணம் விரட்ட விரட்ட,
மனிதன்
மனம் பதைத்து ஓடும்
முடியாத பந்தயம்தான்,
மண்ணில்
மனித வாழ்க்கை என்பது...!
02.
நரகமாய்...
---------------
நரகத்தைக் கொண்டுவந்து
நடுவீட்டில் சேர்த்துவிட்டது,
அவன்
சொர்க்கமென்று எண்ணி
சொந்தமாக்கிக் கொள்ள
தேர்ந்தெடுத்த
திருமண வாழ்வு...!
03.
கிழிந்தது...
--------------
தேர்தல் களத்தில்
கிழிந்து கிடப்பது
கிராமத்து கொடிக்கம்பத்து
கட்சிக்கொடிகள் மட்டுமல்ல,
கட்டிக் காத்துவந்த
கிராம மக்கள் ஒற்றுமையும்தான்...!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-24