இன்முகம்.. சொல்லுதல்..
01.
இன்முகம்..
----------------
எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்
இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.
02.
சொல்லுதல்...
-------------------
சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.
சிலதை
சொல்வதற்கில்லை.
சிலதை
சொல்லித் தெரிவதில்லை.
சிலதை
சொல்லாமல் இருக்க முடிவதில்லை.
சிலதை
சொல்லி ஒன்றும் ஆவதில்லை.
சிலதை
சொல்வதால் பெரும் தொல்லை.
இப்படிப் போகும்
சிலதை
எப்படி முடிக்க
என்றும் தெரியவில்லை.
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-23