உறுத்தல்...!
-------------
இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.
வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்
அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்
இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.
அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.
இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்
இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.
ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்
பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்
குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-01 00:00
செல்வராஜ் ஜெகதீசன்...
அபுதாபி கண்டெடுத்த
ஓர் அன்பின் அபிமானி!
அடுத்தவர் உணர்வினை...
நம் அகமது ஏற்கட்டும் !
அவர் குமுறல்கள் அடங்கும் வரை
நம் உறுத்தல்கள் நீளட்டும் !!
நண்பரே !
தொடர்ந்து எங்களை உறுத்துங்கள்...
உங்கள் வரிகளால்!
- என்றும் பிரியமுடன்,
ரஞ்சினிமைந்தன்,
கணக்கம்பாளையம், திருப்பூர்.