Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சொல்லிக் கொள்கிறாய்...வாழ்விக்கும் மரணம்

- சு.திரிவேணி, கொடுமுடி

சொல்லிக் கொள்கிறாய்...

01.
சொல்லிக் கொள்கிறாய்...
------------------------------

இரண்டு புள்ளிகள் எதிர்நிலையடைகையில்
இடையிலிருப்போர் நிலை பரிதாபம்தான்.
சமாதான முயற்சிகள் பல வகையுண்டு.
பள்ளத்தை இட்டு நிரப்பி மேடாக்கலாம்
மேட்டைத் தட்டிப் பள்ளமாக்கலாம்
கயிற்றைக் கட்டி இழுக்கும் வகையும் உண்டு.
சமனப் படுத்தும் முயற்சியில் ஏனோ
எப்போதும் நீ கயிற்றைக் கட்டி
இழுக்கவே விரும்புகிறாய்!

எந்த விவாதத்திலும் எதிர் நிலையிலேயே இருக்கிறாய்
பிறரின் நியாயம் புரிவிக்கும் முயற்சி என்றாலும்
யாருக்கும் புரியாததோ என் நிலைப்பாடு என
ஏற்படும் குழப்பம் மனக் கரைகளை
அரித்துக் கொண்டேயிருக்கிறது.
என் தரப்பு உணர்வுகள் பொருட்டே இல்லை உனக்கு.

சமாதானத்திற்கான கயிற்றை வீசத் துவங்குகிறாய்.
வெற்றியாய் நீ உணர்வதற்குள்
உன் கயிற்றில் சிக்குண்டு மூச்சுத் திணறி
மரண அவஸ்தையடைகிறேன் நான்.
காற்றில் சிக்குண்ட காகிதமாய்
சிதைகிறது மனம்.

கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு நான்
வருவதற்குள் மீண்டும் ஓர் முறையாய்
சமாதானக் கயிற்றை வீசுகிறாய் நீ
மறுபடியும் செத்துப் பிழைக்கிறேன் நான்.
ஆனாலும் நீ சொல்லிக் கொள்கிறாய்
எப்போதும் நடுநிலையிலிருப்பதாக!!


02.
வாழ்விக்கும் மரணம்
--------------------------

காலச்சக்கரம் பதிப்பிக்கும்
அழுத்தமான காலடிச்சுவடு
மரணம்!

விதியை மீறாமல்
விதிவிலக்கில்லாமல்
வேறுபாடு எதுவும் காட்டாமல்
மனித இனத்தைத் தழுவும்!

உடலும் மனமும்
அவதியுற்ற பொழுதும்
இந்த விருந்தாளியை-
வரம் தரும் விருந்தை
வரவேற்க யாருக்கும்
மனம் இருப்பதில்லை!

மோப்பக் குழையும்
அனிச்சம் இல்லை அவன்.
முகஸ்துதி முக்கிய அலுவல்
எதுவும் கேளாச் செவிடன்.
பாரபட்சப் பார்வை இல்லாதவன்.

இந்த மரணம் தான்
புண்ணியம் தேடத் தூண்டுகோல்.
சீரிய தலைமுறையைச்
செதுக்கும் சிற்பி.
மனித மனத்தின் ஆசை
வெள்ளதிற்கான தடுப்பனை!

மரணம்-
மட்டுமில்லாது போனால்
மனிதம் என்னும்
சொல்லின் பொருள்
மரணித்திருக்கும்!

தன் மழலைகளைத்
தானே தின்று தீர்க்கும்
மீனின் இயல்பிலேயே
மானுடமும்
மரணித்து வாழாமல்
வாழ்விப்பது மரணம் தான்!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-13


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வலையும் வலமும்
  • ஆளுமை
  • பெண் மனம்
  • எங்கிருந்து வருகிறது.. காரணமில்லாமல்
  • ஊருக்குப் போகிறேன்.. வெற்றிஉண்டு!!
  • மறக்க வைத்த.. எ (உ)ன் வாழ்க்கை
  • கருவறை உறவு

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube