கைமண் அளவாய்… கல்லடியாய்… வேறுபாடற்றது…
01.
கைமண் அளவாய்…
------------------------------
கற்றது
கைமண்ணளவு என்றார்கள்,
அதனால்தான் அவள்
படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு
படி ஏறுகிறாளோ-
சித்தாளாக…!
02.
கல்லடியாய்…
-----------------------
கல்லடிபடும் என்பார்கள்
காய்த்த மரம் என்றாலே,
இங்கே
காய்க்காத மரம் ஏனோ
கல்லடிபடுகிறதே…
மரத்தின் குற்றமல்ல இது,
மரத்துவிட்ட
மனித மனத்தின்
மாறாட்டம்தான் இது…!
03.
வேறுபாடற்றது…
-------------------------
ஏட்டப்பனின் தாயும்
கட்டபொம்மனின் தாயும்
காட்டிய அன்பினில்
கட்டாயம் இருக்காது,
கடுகளவு வேறுபாடு…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-16