இவனுக்கு வராதது
வானில் பறவைகள்
வரிசையாய்ப் பறக்கின்றன,
வாய்விட்டு எண்ணுகிறது குழந்தை-
ஒன்று, இரண்டு, மூன்று
என்றாக!
மனிதனே,
இந்த
ஒழுங்குமுறை உனக்கு
ஒத்துவரமாட்டேன் என்கிறதே!
ஏக்கம்...
ஏங்குகிறது மனது-
இப்போது
மண்டையோடுகளை
மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும்
மனிதன்,
எப்போது பார்க்கப்போகிறான்
இதயத்தை!
இயற்கையும்..
மண பந்தங்கள்,
பணத்தைப்
பணத்துடன் இணைக்கின்றன!
இவர்களைப் பார்த்துத்தான்
இப்படிச் செய்கிறதோ
இயற்கையும்-
கரையில் உள்ளவரை
கண்ணீர் விடவிட்டுக்
கடலில் பெய்கிறதே
மழை!
--செண்பக ஜெகதீசன்
www.geocities.com/vsnjag/
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-02-16