பாசத்திற்குரிய அப்பாவுக்கு ...
----------------------------------
“பெண் குழந்தை”...
என்றதும்...
பெருமுச்சு விடாமல் !
பார்த்த, அடுத்த நொடியில்...
இந்த வைரச்சிலைக்கு...
கண் பட்டு விட கூடாதேன்று...
கருப்பு வளையல் பூட்டியவர் !
கால்கள் தரையில் பட்டு...
சிவக்க கூடாதேன்று...
தன் மார்பை எனக்காய்...
தரையாக்கியவர் !
விளையாடி களை(உடை)க்க...
அவர் வாங்கி ...
கொடுக்காத பொருட்களே...
இல்லை !
அழகாய் அறிவுரை...
போதிப்பார் !
பொறியாளராய்...
பாடம் நடத்துவார் !
என் பட்டங்கள்...
அவர் எனக்களித்த...
விலைமதிப்பில்லா...
பரிசுகளே !
அரசிகளுக்கு சோதித்து...
கொடுப்பதை போல ...
என் உணவை...
ஏன் மருந்தை கூட...
சோதிக்காமல்...
கொடுத்ததில்லை !
என்னை ...
தங்க சிலையாய்...
அலங்கரித்து...
அழகு பார்த்ததும்...
அவரே !
நான் சிரித்து கொண்டே...
இருக்க வேண்டும்...
என தன் ஆசைகளை...
மாற்றிக்கொண்டவர் !
என் மனதின் ஆசைகளை...
நிறைவேற்ற உலகை...
விலை பேச கூட...
தயங்காதவர் !
“என்னடா வேணும்...?”
என எனக்கான சகலமும்...
இன்று வரை...
பார்ப்பதும் அவரே !
என்ன சொல்லி அழைப்பது...
இந்த மகானை...
“அப்பா”..
“தந்தை”...
“தகப்பனார்”...
“தாயுமானவர்”..
“தியாகி”...
இவை எல்லாவற்றையும்...
சேர்த்து ஒரு வார்த்தை ...
கிடைக்குமானால் !
அதுவே...
பொருந்தும் ...
என் பாசத்திற்குரிய...
“அப்பாவுக்கு” !
-அனாமிகா பிரித்திமா
anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-15
மிக அருமையான கவிதை..
தந்தையை அவர் தங்களை வளர்த்த முறையை வைத்தே கவித்துவமாக எழுதியிருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்..
தோழமையுடன்,
க.அருணபாரதி