பொம்மை கல்யாணம்...
------------------------------
குழந்தைகள் நடத்தும்...
பொம்மை கல்யாணம்...
சிறப்பு விருந்தினராக நான் !
பெண் அழகாய் இருந்தாள் ...
சிவப்புப்பட்டுப்புடவையில்...
மாப்பிள்ளை நேர்த்தியாய் ...
இளம் - அரக்கு சூட்டில் !
அழைப்பு முடிந்தது, நிச்சயம் நடந்தது...
திருமணமும், வரவேற்பும் மிக சிறப்பு !
வீட்டிற்கு கிளம்பும் தருணம்...
மாப்பிள்ளை பெண்ணிடையே...
மற்றொரு பொம்மை விழுந்தது...
பெண் பொம்மை சரிந்தது !
அய்யோ...
என்ன கண்ணா என்ன ஆச்சு ?
இது கூட தெரியலயா அத்தே ?
இரண்டு பேருக்கு இடையில...
இன்னொரு பொம்மை !
அதனால...
பெண் பொம்மை சரிந்தது !
சொன்னது ...
என் அண்ணன் மகன்...
வயது நான்கு !
அவனுக்கு...
விளையாட்டு பாடம் !
எனக்கு ...
வாழ்க்கை பாடம் !
-அனாமிகா பிரித்திமா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-08-09