- நளாயினி
கானல் நீரா?!
காவியமா?!
கடுகதியாய் போகும்
எண்ண ஓட்டமா?!
நினைவுகளுக்கு
சக்கரம் பூட்டிய வேகமா?!
குழந்தைத்தனத்துள் தெரியும்
குது£கலமா?!
இதுவரை யாருமே
வெளிக்காட்டாத
உயரிய சிந்தனையா?!
யாருமே அனுபவித்திராத
இன்ப ஊற்றா?!
என்னவென்றே இனம் காணமுடியாத
ஒரு தளுவல் !!
காற்றில் பறக்கும் அனுபவம்
மலையின் உச்சியை
தொட்டுவிட்ட அனுபவம்
யாரும் அருகில் இருப்பதை கூட
மறந்த நிலை:
இவை எல்லாம்
சின்னத்தனமாய் தொ¤யவில்லை-
ஆனாலும்
சமூகத்திற்கு பயந்த சாபக்கேடாய் மனதுள்:
தொட்டுவிட்ட தொட்டாச்சினுங்கியாய்
தன்னை மறைத்துத்தான் கொள்கிறது.
அப்பப்போ தன்னை இனம் காட்டும்
அந்த தொட்டாச்சினுங்கிக்கு உள்ள மனசு கூட
பாவம் மனித மனசுக்கு
தனக்குள் இருக்கும்
மனசை காட்ட
சந்தற்பம் கிடைக்காமலே போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து
31-12-2002
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00