இளைஞனே காதலித்து பார்
இளைஞனே காதலித்து பார்
பெண்ணை அல்ல உன்னை
உன் இரத்தகுழாய்களுக்குள் புதுரத்தம் பாய்ந்து ஓடி வரும்
இளைஞனே காதலித்து பார்
பெண்ணை அல்ல உன் உழைப்பை
உன் நரம்புகள் திசைதெரியாது உதவ தெரித்து ஓடி வரும்
இளைஞனே காதலித்து பார்
பெண்ணை அல்ல உன் தன்னம்பிக்கையை
உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஓளி பளீர் என்று வீசும்
இளைஞனே காதலித்து பார்
பெண்ணை அல்ல உன் முயற்சியை
உன் முட்டுகட்டைகள் இருந்த இடம் தெரியாது ஓடி ஒளியும்
இளைஞனே அடைய விரும்பு
பெண்ணை அல்ல உன் இலட்சியத்தை
உன் கால்கள் சிகரங்கள் நோக்கி வேகமாக ஏறத்தொடங்கும்
- லலிதாசுந்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31 00:00
இக்கால இளைஞர்களுக்குத் தேவையான அறிவுரைகளை சுவையான விதத்தில் சொல்லப்பட்டுள்ள கவிதை. ரசித்தேன் ... நான் ஒரு படைப்பாளனாக இருப்பதை மறந்து, ஓர் உண்மையான வாசகனாக!
> கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி 620021.