இணையம்
கணிணிப்பெண் கண்ணசைக்க
எலி வலைவிரிக்க
எழுத்துக்கள் விளையாடும்
டென்னிஸ் அரங்கம்
உலகிற்குள் வீடு - நிலைமாறி
வீட்டிற்குள் உலகை கொண்டுவர
போடப்படும் வலைபின்னல்
வாழ்த்துகளையும் தகவல்களையும்
மட்டுமல்ல
இருமனங்களையும் பரிமாறிக்கொள்ள
தூதுவிடப்படும்
நவீனகால புறா - இந்த இணையம்
- லலிதாசுந்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-28