பிரிவு
தேக அழகை விட
உள்ளத்தின் அழகு சிறந்தது என
- ரசிக்க வைப்பது
கண்கள் பேசும் மொழியை விட
உள்ளங்கள் உரசிக்கொள்ளும் மொழி
இனிமையானது என
- உணர வைப்பது
உடலின் வேதியியல் மாற்றங்களை விட
உள்ளங்களின் வேதியியல் மாற்றங்களை
சுகமானது என
- புரிய வைப்பது
ஐம்புலன்களை அடக்குவது கடினம் என
வள்ளுவன் வரிகளை ஞாபகபடுத்துவது
உண்மை காதலின் பிரிவு.
-- லலிதாசுந்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-20