இருட்டுது
இனிப்பெய்யும்
பெய்யத்தானே வேண்டும்
ஒரு பாரிய மழை
பயிர் பச்சை தழைக்க...
பொச்சுப் பொச்செனக் காற்று
தலைமயிரை பொசுக்கிவிட்டது போல
இடைக்கிடை
ஓலையிலே உரசல்
அம்மி நகரும்
இல்லாட்டி
மலடு தட்டிப்போன வானம்
முக்கி முக்கி
இடி முழக்கத்தை ஈனாது
அதுதானே
எத்தனை நாளைக்கு அருங்கோடை
வெறும் உரலைப் போட்டு இடித்தாலும்
அவலைக் காணலாம்
ஒரு பாட்டம்
மழையைக் காண்பதுதான்
குருடனுக்குக் கட்டெறும்பு போலென்ற
கதை மாறி
மழை பெய்யும்
இந்த மாதி£¤ மின்னல் வெட்டினால்
ஒரு வானம் என்ன
ஏழு வானமும் பாளமாய்ப் பிளந்து
கடலைக் கொண்டுவந்து ஊற்றும்
பார்
நெருப்பில்
தீக்குச்சி கொளுத்துவதைப் போல
மின்னல்
எனக்குத் தெரியும்
ஒரு காலத்தைப் புரட்டுவது
அவ்வளவு இலகல்ல
இங்கே கோடை
புரட்டப் புடுகிறது
வா குடையைத் தேடுவோம்
--- ”காகம் கலைத்த கனவு” தொகுப்பிலிருந்து
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
fantastic.......