நிலாவனம்
*
வானத்துக்கன்னி
வனங்களின் மீது
உமிழ்கிறாள்
இரவின் பசியை.
ஆலிங்கனப் பிணைதலில்
இடைப்பட்ட ஒளிக்கீற்றால்
விலகி ஒளியும்
இருளின் பாம்புகள்.
விருட்சக் கிளைகளின்
உச்சி முகர்ந்து
மேனியெங்கும்
விரிக்கும் விரல்களால்
வேர் வெறி கொண்டாட
கூடுகள் நொறுங்கும்
கானகக் கலவியால்.
அந்தியின் சருகுகள்
குளுமை குடித்து
அலையும் காற்றுடன்
கட்டிப் புரள
ஒற்றைக்கண் ஏவலால்
காட்டின் காமம்.
அம்புலியின் ஏக்கம்
அடர்வுகளால் கரைக்கப்பட
புலர்தலின் தீண்டலால்
விழிக்கும் வனம்,
மீண்டும்
பகல் பொறுக்கும்
மற்றுமொரு
இரவின்
வருகைக்காய்.
-- *நெப்போலியன்
சிங்கப்பூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16 00:00