சொமாலிய சோகம்
கொசோவா கொடுமை
உகாண்டா பசி
உலகின்
பசித்த தேசங்களின் நிலைகளைக்
கேட்டு
படித்து
ஆராய்ந்து...ஆராய்ந்து
எல்லோரிடமும்
வாய் கிழிய பேசத்தான் செய்கிறேன்
வறுமை தீர்க்கும் வழி பற்றி!

கொஞ்சமும்
வெட்கப்பட்டதேயில்லை நான்
பயணப்பாதைகளில்
வற்றிய வயிறோடு கையேந்தும்
உயிர்களிடம்
உதடுப்பிதுக்கி நடக்க!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

கவிதை கோணல் மனசு என்று தலைபிட்டிருந்தாலும் வாசகர் மனதை நேராக்கும் சீராக்கும் .
கவிதை பனி தொடர வாழ்த்துக்கள் அய்யா
பத்மா

மனம் கோணும் அளவிற்கு இருக்கிறது நம் நாட்டு தலைவர்களின் செயல்பாடுகள். அவர்களை நம்பி வாழக்கூடாதுrnஏழைகள்.வறுமையை ஒழிக்க யாருக்கும் விருப்பமில்லை. அதை மட்டும் ஒழித்துவிட்டால் அதிகார வர்க்கத்திற்கு மதிப்பு இல்லை. இதுதான் உண்மை

Share with others