(சந்தம்)

பட்ட “த்ருஸ்டி” போகவே
பாய்ந்து வந்து தோன்றினான்!
துட்டர் கண்ணைப் போக்கவே
சூலம் கையில் ஊன்றினான்!
கட்டி வைரம் மண்ணுள்ளே
கண்படாமல் போயினும்
வெட்ட வெட்ட மின்னலாய்
வெளியில் வந்த(து) ஒப்பவே
அகத்தியர் முன் நின்றவன்
அவரோடு உள்ளே போனவன்
சகத்தின் மக்கள் துன்பத்தைத்
தாங்கொணாது வந்தனன்
சுகத்தை ஊட்டி நின்றனன்!
தூய நிலவாய்ப் பரவினன்!
அகத்துள் வந்த கணபதி!
அகக்கண் ”த்ருஸ்டி” கணபதி!
விஷ்ணுவைப்போல் சக்கரம்!
வேலனைப்போல் ”ஆயுதம்”!
இஷ்ட ஆஞ்ச நேயன்போல்
இடது கையில்பெருங்கதை!
துஸ்டர் அஞ்சும் “காளி”போல்
”சூலம்” ”அங்குசத்துடன்
கஸ்டம் போக்கும் கணபதி!
”கண்” ஆம் “த்ருஸ்டி” கணபதி!
முடித்து வைப்பான் செயல்களை
மோதகத்தைப் படையுங்கள்!
பிடித்து வைப்பான் வரங்களை!
”பிட்டு” தந்தே துதியுங்கள்!
கடித்தே உங்கள் வினைகளைக்
களைய ”கரும்பு” தாருங்கள்!
துடித்தே சொல்லும் என் ”மந்திரம்”!
தும்பிக்கையின் தந்திரம்!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others