கனவு
* பனித்துளிகள் மிதக்கும் புல்வெளியினூடே
கால்தடம் பதியமால் என் பயணம்
* ஒரு ரோஜா தோட்டம் என்னை
ககையசைத்து வழியனுப்பியது
* காடுகளை கடந்தேன்,
மலைகளை தாண்டினேன்
கடலில் மிதந்து சென்றேன்
* மேகங்கள் என்னை ஊடுருவி சென்றன
தொட்டு விடும் தூரத்தில்
நடசத்திரங்களும், நிலாவும்
* எனக்கு கீழே பறவைகள் பறந்து சென்றன
தடுப்பு சுவராய்
வானம் மட்டும் எனக்கு வழிவிடவில்ல
* வருத்தத்துடன் நிற்கையில்
சூரியனின் பார்வை
என் மேல் விழ தொடங்கியிருந்தது....
ரா.கிரிஷ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-02-11