வெளுப்புகள் இல்லாமல் எங்குமே கருமை
நெருக்கங்கள் அற்று சிதறிக் கிடந்தன
வெள்ளித் தகடுகள்
அசைவுகள் அற்றுக் கிடந்த மேகங்களுக்குள்
விழித்துக் கொண்டிருந்தது நிலவு
நினைவுகள் எதுவுமின்றி
இயல்புகள் மறந்து
எல்லாமே
ஆசைகள்
ஆவேசங்கள்
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்கள் எதுவுமின்றி
மனமும்
தனிமையின் கதறல்களையும்
காதலின் கண்ணீரையும்
தேக்கி இறுகியிருந்த மேகங்களின் நடுவே
பூமியை நோக்கி
விழுந்து கொண்டிருந்தது
ஒற்றைச் சிறகொடிந்த குருவி ஒன்று-
அவன் காதல் சொல்லிக் கொண்டிருந்தான்
இன்னொரு இதயத்திடம்
-துர்க்கா (கனடா)
நன்றி: உயிர்நிழல்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21 00:00