சீர்திருத்தம்
----------------

நாங்கள் மதச் சார்பற்றவர்கள்,
ஆனால் மதக் கலவரங்கள்
மட்டும் நடப்பதுண்டு .
நாங்கள் சீர்திருத்தவாதிகள் .

நாங்கள் அமைதிப்
பூங்காவில் வசிப்பவர்கள் ;
ஆனால் குண்டுகள்
தவறாமல் வெடிப்பதுண்டு ;
நாங்கள் சீர்திருத்தவாதிகள் .

நாங்கள் உலக
சமாதானத்தை விரும்புகிறவர்கள் ;
ஆனால் பிருத்வியும்
அக்னியும் இங்குண்டு ;
நாங்கள் சீர்திருத்தவாதிகள் .

நாங்கள் கட்டுக்கோப்பானச்
சட்டம் உடையவர்கள் ;
ஆனால் கற்பழிப்புக்கள்
காவல்நிலையத்திலும் உண்டு.
நாங்கள் சீர்திருத்தவாதிகள் .

நாங்கள் பெண்மையைக்
காத்துப் போற்றுகிறவர்கள்;
ஆனால் ......
தொட்டில் குழந்தைத் 'திட்டம் உண்டு ;
நாங்கள் சீர்திருத்தவாதிகள் .

நாங்கள் பகிர்ந்துண்ணும்
பழக்கம் உடையவர்கள் ;
ஆனால் நதிநீரில் மட்டும்
அதற்கு விலக்குண்டு ;
நாங்கள் சீர்திருத்தவாதிகள் .

சீர்திருத்தம் பற்றி
மேடையில் வாய்க் கிழிய
பேசுபவர்கள் ; வீட்டில் பெண்களை
மட்டும் பூட்டி வைப்பதில் வல்லவர்கள் ;
நாங்கள் " இந்தியர்கள் "

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2016-03-25 00:00

கருத்துகள்

Share with others