சிவப்பு மல்லிகை
--------------------
இரத்தம் குடிக்கும் மேகம்,
நிலத்தில் படிந்த கொலைகளில்லிருந்து.
நிறத்தில் பெய்கிறது மழை
மரத்தில் எல்லாம்
அரம்
மறந்த சிவப்பு
மல்லிகை!
நிறம் வெளுத்த மலர்கள்
துறந்தது போல் அஹிம்சை உடை.

இனி பனி தவழ
இதழ்கள் மிருதுவில்லை
நரைத்த மரங்களின்
நன்மலர் வேட்டையால்!

உரு சிதைந்த
ஊன மலர்கள்,
உதிர்க்கப்பட்ட மகரந்தம்!
நன்மலர்கள் தீனியாயின
நரை மரங்களின் வேட்கையுள்!
மர முற்களின் கொடுமையால்
முறிந்து போன மிருது இதழ்.
உரிந்து போகும் பட்டைகலின்
பருவம்
நரைத்துப் போன மரங்களுக்கு.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2016-03-25 00:00
Share with others