உன்னை நீ அறிவாய்.. சொல்லப்படாத கவிதைக்கு

01.
உன்னை நீ அறிவாய்
-------------------------------

உன்னை நீ அறிவாய் தோழா
உன் உயரம் தெரியாதவரை
சின்னஞ்சிறு மேடும் பெரு மலையே
உயரம் அறிந்தவர்க்கோ
பெருமலையுஞ் சிறுமேடே
நீண்ட இரவின் இருள் கூட
சிலமணித்துளிகளில் கலையும் போது
உன் இயலாமை இருள்தானா மறையாது ?
உன்னை பற்றி தெரிந்துகொள்ளாதவரை
உலகின் கடைகோடியில் நீ
உன் உயரம் தெரிந்துகொண்டால்
உன் திறம் தெரிந்து கொண்டால்
உலகம் உன் கைகளில்
இருள் கிழிக்கும் பகலவனாய்
இயலாமை இருள் அகற்றி வா
உன் பார்வை
வான் தாண்டியும் போகும்
உன் விரல்கள் ஆதவனையும் உருட்டிவிடும்
எழுந்து வா
உன்னை எதிர்பார்த்து இந்த உலகம்
உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறது
உன் இமை திறப்பிற்காக
ஒட்டு மொத்த மனித சமுதாயமே
விழி முன் தவம் கிடக்கிறது

02.
சொல்லப்படாத கவிதைக்கு
------------------------------------

எழுப்படாத புகழுரை
வாசிக்கப்படாத வரையில் கவிஞனின் நெஞ்சில்
சிம்மாசனமிட்டமர்ந்தாய்
வெளிப்பட்ட அக்கணமே
விமர்சங்கனங்களின் தாக்கங்களுக்கு
ஆட்பட்டாய்
என் கவிதை பெண்ணே
உனக்கு எத்தனை எத்தனை அணி செய்து வைத்தேன்
உன்னை என் நெஞ்சில் பூட்டியல்லவா வைத்திருந்தேன்
உன்னை வாசித்தவுடனே
என்னை விட்டு எப்படி மாறி போனாய்
வாசகர்களின் வார்த்தைகளுக்குள் சிறை பட்டாய்
ஆசிரியர்களின் கைகளால் மோட்சம் பெற்றாய்
கவிதை நங்காய் !
என்னை மறந்தும் இருந்து விடாதே
நீ தவழும் வரையே நான் கவிஞன்
நீ என்னை புறக்கணித்து விட்டாலோ
நான் வெறும் மனிதன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2016-03-24 00:00

கருத்துகள்

என் கவிதைகளுக்கும் தக்க அங்கிகாரம் தந்து தமிழ் அன்னையின் காலடியில் தவழ விட்ட ஆசிரியர் அவர்களின் நல்ல மனதிற்கு நன்றி மலர்களை அர்ப்பணிக்கிறேன் rnrnநன்றியுடன் rnrnகவிஞர் சக்தி ச ரவிச்சந்திரன்

Share with others