பலூன் ஒரு பாலை நிலப்பூ.. உடைந்த கண்ணாடியும் தலைவி குறித்த நினைவுகளும்

01.
பலூன் ஒரு பாலை நிலப்பூ
------------------------------------

காத்திருப்புக்களின்
முடிவில் வரும் தலைவனுக்கென
பலூன்கள் ஊதப்பட்டு
தொங்க விடப்படுகையில்
அவற்றின் மஞ்சள் நிறம்
வெயிலுடன் புணர்ந்து
வெடித்து இதழ்களாகும்
அவ்விதழ்களைப் போலவே
தலைவுயும் சுருக்கம் கொள்கிறாள் ஏனோஒ!

02.
உடைந்த கண்ணாடியும்
தலைவி குறித்த நினைவுகளும்
------------------------------------------------
ஒரு நிலைக் கண்ணாடி
சில்லுகளாக உடைக்கப்பட்டபோது
ஒற்றைத் தலைவி பல்லாயிரத்தவளாக
பார்க்கக் கிடைத்தாள்
புரான மலர் உருவமுடையவள்
வாடியும் வாசமற்றவளாகவும்
தன் மயிர்க் கொடிகளைக்
காற்றில் துழாவி நடக்கையில்
கால்கள் புண்பட்டு
சில்லுகள் சிவப்பாகின்றன.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-05 00:00

கருத்துகள்

வணக்கம், நான் கவிஞர் றாம் சந்தோஷ். இவ்விரு கவிதைகளும் எனது தொடக்க காலத்தில் எழுதியவை. சரியாக வரவில்லை. எனது தொகுப்புகளிலும் இடம்பெறவில்லை. இணையத்தில் இருப்பதால் சிலர் இக்கவிதைகளை சுட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே இவற்றை தங்களது தளத்திலிருந்து நீக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கலைஞனின் உணர்வை புரிந்துகொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

நன்றி

றாம் சந்தோஷ்

Share with others