நதிபாய்ந்த தடம் நோக்கி

நதிபோல பாய்ந்து
கரையின்றி தவித்த நாட்கள்
கடல் கண்டபின்னாளும்
நதி பாய்ந்த தடம் நோக்கி
கண்ணீர் விட்ட நாட்கள்
எத்தனை எத்தனையோ ?

புதிய உறவிற்காய்
பழையவற்றை விலக்கிய நாட்கள்
புதிய உறவே புதிரான போது
பழையவற்றை எண்ணி வேதனித்த நாட்கள்
அன்று புரிந்திருந்தும் புரியமனமில்லை
இன்று அது வேதனிக்கின்றுது

அம்மா தந்த இறுதி முத்தத்தை
இன்றும் எண்ணியெண்ணி
விழிவழி நீரால் பூமி கழுவுகின்றேன்
முகமறியாதவன் பாசம் கொட்டுகின்றான்
பாவி மனதோ தாயன்பிற்காய்
என்னைப்போல் எத்தனை எத்தனை

பிரிவு என்பது நரகசுகம்
கவிஞன் சொல்லிவிடலாம்
அனுபவிக்க முடியாது பிரிவு
என்பது விசம் சிறுக சிறுக
எம்மை தின்றே கொண்றுவிடும்

- ந.பரணீதரன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21 00:00
Share with others