அடியே !
----------------

என் ஆழ்கடலே
உன் முகத்தின் சுழிப்பை
என் விழிப்பை தாங்காது.....
“பிழையில்லா
இலக்கணம்
நீ
உன்னை
உருவாக்கும்
இலக்கியம் நான்”

இரவு முழுக்க
உன் ஞாபகக் கொசுக்கள்
என்னை உறங்க விடாமல்
உருக்குலைத்துப் போடுகிறது
என் காதல்
இரட்டை கிளவி..........
ஒன்றிலிருந்து ஒன்றை
பிரித்தால் பொருள் தராதாமே!
உன்னிலிருந்து
என்னைப் பிரித்தாலும்
அப்படித்தான்
நான் பொருளற்றுப் போவேன்....

உரக்கச் சொல்
என் விழியை
உறங்கச்சொல்
உன்
நினைவுகளோடே
நித்திரை கொள்கிறேன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-04 00:00
Share with others