பன்னாட்டு மென்தளத்தில்....
-----------------------------------
அன்றைய வாரயிறுதி
இரவும் அப்படித்தான்
கழிந்திருந்தது....
பெண்ணுரிமையென
சராசரிகளுக்குத் தப்பி
கண்ணாடிக் குடுவைகளில்
மதுவூற்றிப் பகிரக் கேட்டிருந்த
நானும்....
ஆளுமைத்தனம் பயின்று
குதிகால் செருப்பினடியில்
சிகரெட்டுச்சாம்பல்
தட்டி .... வேண்டாமெனச்
சொல்லியிருந்த நீயும்....
என்ன காரணமென்று
தெரியாமலேயே..
பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருந்தோம்
நம் காதலை....
நம்மைச் சுற்றியிருந்த
ஊர் எனப்படுவது
நம்மைத் தவிர்த்து
எல்லோரிடமும் சொல்லியிருந்தது
நமக்குள் எதுவோ இதுவாம்......
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31 00:00