அடையாளமில்லா ஆணி வேர்கள்
----------------------------------------------
அவனுக்கென்று
அடையாளம் ஏதுமில்லை-ஆனால்
அவந்தான் இந் நாட்டின் அடையாளம்!
கால் வயிறு சோறும்
கால் வயிறு நீரும்
அரை வயிறு பட்டினியோடும்
உழைத்துக் கொண்டே இருக்கின்றான்
தேசத்தின் வயிறுகளுக்காக!
நிவாரணம் கேட்டே
நிர்வாணம் அடைந்தவன்!
இன்றைய நிலையில்
மரபணு மாற்றப்பட்ட பயிறும்
மரபு வழி வந்த அறிவுமே
அவனது உடைமை!
இங்குப் புறக்கணிக்கப் படுகின்ற
புத்தர்களில் அவனும் ஒருவன்!
வாக்குகளுக்காவே அவனைப்
பற்றிப் பேசும் நாக்குகளுக்குத் தெரியாது,
அவனது,
உழைப்பின் சிறப்பும்
வியர்வையின் கரிப்பும்!
நாடாளும் மாடுகள்
அவனை நடை பிணமாக்கிய போதும்-அவன்
நடந்து கொண்டே இருக்கின்றான்
நம்பிக்கையோடே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-26 00:00
அழகான கவிதை புகழேந்தி.சுருக்கமாகவும் நறுக்கெனவும் உள்ளது. பாராட்டுக்கள்.rnஅன்புடன்rnஎசேக்கியல்காளியப்பன்.