அவசரத் தீர்மானம்.. மிரள வேண்டாம்
இவர்கள் வெறும் மனிதர்கள்.. பிரளயம்
-----------------------------------------------------------
01.
அவசரத் தீர்மானம்
பூபாலத்தில்
வெயிலைத் தொலைத்துவிட்ட
அந்தச் சூரியன்
முதுமை கொண்ட
அந்தி வேளையிலே......
மலையுச்சியில் பறவைகள்
தங்கள் இனத்தோடு
கூடு திரும்பின
ஒரு சோதிடன் கொட்டாவி
விட்டுக் கொண்டே குளித்த
அந்த வேளையில்
அரசியல்வாதிகளின் பேச்சில்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டு வந்த ஒரு கிழவி
வெற்றிலை குதப்பிய
வேளையில்தான்
இந்த நிலவு இருட்டிற்கு
வெளிச்சம் தந்தது
02.
மிரள வேண்டாம்
இவர்கள் வெறும் மனிதர்கள்
-----------------------------------------------------
சூரனுக்கு
ஒரு
வேலாயுதம்
இரண்யனுக்கு
ஒரு
சிங்க முகம்
சிரித்து எரிப்பதற்கு
ஒரு
திரிபுரம்
சாத்தானை
விரட்ட
புனித நீர்
அவதாரங்களே உங்கள்
ஆயுதங்களால்
எதிரிகளைத்தானே கொன்றீர்கள்
இவர்களின் ஆயுதங்களோ
எதிரிகளின்
இனத்தையே கொன்று குவிக்கிறது
இதையெல்லாம் கேட்டு
மிரள வேண்டாம்
இவர்கள் வெறும்
அணுக்குண்டு மனிதர்கள்
03.
பிரளயம்
---------------
அந்த வறண்ட
வான் நிலத்தில்
மின்னல்கள்
வேர்களாய்த் துளிர்விட்டு
சூய மரமாகி
ஒளிக்கதிர்கள்
கிளைகளாக விரிந்தபோது
வானவில்லாய்
நிறம் மாறி உதிர்ந்த
இலைகளின்அசைவில் மேகக் கூட்டங்களின்
திரை விலக.....
நட்சத்திரப் பூக்களின்
நிழலில்
பல கோள்களும்
சுழல
வளர்ந்து
தேய்ந்து கொண்டிருந்த
அந்த நிலவின் கூட்டில்.........
காயமில வாயுக்களும்
பிராண வாயுக்களும்
புணர்தலும் புணர்தல்
நிமிர்த்தமான வேளையிலே
எறிகற்களின் விழுதுகள்
ஒன்றுடன் ஒன்று
ஒன்றி உரச
எறும்புக் கூட்டங்கள்
தனது கருமுட்டைகளோடு
அதள பாதளம் நோக்கி
பூமியைக் குடைந்தபோது
விஞ்ஞான மனிதர்கள்
உருவாக்கிய ஏவுகணை
முடியைத் தேடிப் பறந்தன
பன்றி வேடமிட்ட
மனிதர்கள்
கடவுளின் கால் தடத்தைத்
தேடி அலைந்தனர்......
இயற்கையின் பிடியில்
இறுகிய
இந்தப் பூமியின்
தொங்கு தோட்டமான
சகாரா
சாகா வரம் பெற்ற
திரிசங்கு சொர்க்கம்......
கருத்துகள்
இன்பசுதேந்திரன் எழுதிய இம்மூன்று கவிதைகளும் தனித்துவத்தை சுமந்து கொண்டிருக்கிறது. படைப்பிலக்கியத்தில் கதைச்சொல்லி அல்லது எடுத்துரைத்தல் முக்கியப் பங்காற்றுகிறது. அது கவிதையிலும் தொடர்வது மிகவும் எதார்த்தக் குறியீடாக இருந்தாலும், நவீன போக்குகளில் இதற்கான வடிவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளதைப் இந்தப் படைப்பாளியின் மூலம் கண்டு கொள்ளலாம். மேலும்,rnஇவருடைய பிரளயம் என்கிற கவிதை, ஒரு புதிய உலக வழக்கத்தை எற்படுத்துவதாக; எதிர்ப்பார்ப்பதாக அமைந்திருப்பதுrnபாராட்டக் கூடியதொன்று.rnrnஅன்புடன்rnகுறிஞ்சிமைந்தன்.

பிரளயம் என்ற கவிதையில் இறுதிவரி "திரிசங்கு சொர்க்கம்" என்று வரவேண்டும். அது "திசங்கு சொர்க்கம்" என்று பிழையாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இவன் இன்பசுதேந்திரன்