அழுக்காய் ஒரு தேவதை..விழிகளே
01.
அழுக்காய் ஒரு தேவதை
----------------------------------------
அன்றும் பேருந்தில்
குட்டி தேவதை ஒன்று
அழுக்கு ஆடை உடுத்தி
தலை முடிகள் பறந்து கிடக்க
கைகளிலோ பிச்சை தட்டுமாய்
திரைப்பட பாடல் ஒன்றை
பிழையுடன் உரக்க பாடியபடி
வயிற்றில் அடித்துக்கொண்டு
அங்கும் இங்கும் ஓடி
யாசித்தபடி
காதில் தேனாக ஒலித்தது
அந்த குயிலின் குட்டி குரல்
பட்டுடை அணிந்து
தலையில் பூக்கள் சூடி
கானமேடை ஒன்றின் மேல் அமர்ந்து
தாளம் தட்டி தலை அசைத்து
இவள் பாடும் அழகை
கண் முன் நிறுத்தி கண்டேன்
காதருகே அதே குரல்
கண் திறந்த போதோ
மீண்டும் அதே வரிகளை பாடி
என்னருகே கையேந்தியபடி
அந்த சின்ன அழுக்கு தேவதை
நெஞ்சில் வலியுடன்
சட்டைப்பைக்குள் என் விரல்கள்
02.
விழிகளே
---------------------
எனது விழிகளே
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள்
வையுங்கள்
நான் காதலில் தோற்கவில்லை
கவலைகள் எனக்கில்லை
பயம் என்பது என்னில் இல்லை
பகைமையோ எனக்குள் இல்லை
பிரிவுகள் கருதி கலங்குவதுமில்லை
இத்தனையும் காட்டாது
இமை மூடி கொள்ளுங்கள்
வலிகள் பலவகை வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்
விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே
உண்மைதான் கண்களுக்கு கயமை rnதெரியாது