1+1=(2)ரிமை ----------------------
பறவையைப் பார்த்து
அதிகாரமாய் சொன்னது
அடைமழை
சிறகுடைய பறவையே
பறப்பது நம் உரிமை
பறக்காமலிருக்காதே
பற! புற! என்றது
அடைமழை அலற
பதிலுரைத்தது பறவை
அடேய் மழையே!
சிறகு கொண்டு பறப்பதா
காலைப் பரப்பி நடப்பதா
முடிவெடுப்பது நாங்கள்டா!
உரிமை என்றால் இரண்டுந்தான்
பறப்பதும் பறக்காதிருப்பதும்
இந்தப் பராளுமன்ற வவ்வாள்
பல்லை மறைத்து
பறவைப்போல் நடிக்கும்
பிறகு பல்லைக் காட்டி
மிருகம்போல் நடக்கும்
வவ்வாள்களின் அகராதியில்
நிற்றல் என்பதற்கு
தலைகீழாய் தொங்குவதே அர்;த்தம்
பாராளுமன்ற வவ்வாள்களை
நேர்படுத்தல் என்பது
பிப்ரவரி முப்பத்தொன்றிலும் நிகழாது
மான்களின் தேசத்தில்; மலைப்பாம்பின் செல்வாக்கில்
ஓநாய் தலைமையில் ஒரு கூட்டணி
நரியின் தலைமையில் ஒரு கூட்டணி
தண்ணீர் முதலைகள் தனியணி
மான்கள் தம் வாழ்வை
யாருக்கு பலியிடும்?
இதுக்கொரு தேர்தலா!
உன் பற்களின் பிடியில்
கூர்மையான அழுத்தத்தில்
மூச்சு உடைந்து
நாக்கு தள்ளுவதே
எங்கள் வாழ்க்கையா!
மடையன்தான் நான் என
நம்மையே பறைச்சாற்றும்
ஓட்டு நாம் போடல் நன்றா!
மனம் வெந்து போனாலும்
போர்வீரர் ஆனாலும்
உயிர்தியாகம் செய்தல் மேலா!
வலிமையின் முகமே மாற்றம்
எமது தேக்கம் விரைவில் நீங்கும்!
அருமை!... அருமை!... வரிக்கு வரி கவிதை!!