மரணத்தின் வாயிலில்
----------------------------------
கந்தகத் துகள்களின் மணம்
இன்னமும் மணக்கிறது
என் சேதசத்தில்!
அந்த நாட்களின் ரணங்கள்
இன்னமும் இருக்கிறது
உறவுகளைத் தொலைத்துவிட்டு
மரணத்தின் வாயிலில்…
எம் வாழ்தலின் முடிவுக்கான
நிமிடங்களை எண்ணிய
கணப்பொழுதுகள்
முள்ளாய்த் தைக்கிறது
குருதிகளும் தசைகளும்
குவிந்த தெருக்களில்
ஜடங்களாய் அலைந்த
பொழுதுகள் கனக்கிறது
வெற்றிவிழாக் காணும்
என் தேசமே…
நீ எப்போ என்
சிறைக் கம்பிகளுக்கு
விடுதலையளிக்கப் போகிறாய்
- கலியுகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-03-23