எங்கள் பூமிக்கு வா…
-----------------------------

அகலத்துக்கும்
அன்பைப் போதித்த அன்னையே!
மனிதக் குவியல்கள்
மடிந்த
எங்கள் பூமிக்கு வா…
அல்லலுற்று
அளவு கணக்கின்றி
அழிவுக்கு ஆட்பட்டு
அகதிகளாய் அலைந்து
அவதிப்படும் ஆத்மாக்களை
சேர்த்தணைக்க
எங்கள் பூமிக்கு வா…

அப்பாவிகளை
புல்டோசர் கொண்டு
அரைத்துப் பார்த்தது
எங்கள் பூமிதான்
உடைப்பதற்கென்றே
உருவெடுத்த
உருவங்களைப் பார்க்க
எங்கள் பூமிக்கு வா…
புதைக்க நேரமில்லாத
புழுத்துப்போனது தேசம்
பூவாடை இன்றி
பூக்கள் கருகி
இன்றும்
ரத்த வாடை வீசும்
பாலைவனத்தை பார்ப்பதற்கு
எங்கள் பூமிக்கு வா…
திரைமறை நாடகங்கள்
திசை யாவும் சூழ்ந்துவர
நச்சுப் புகை வந்து
நசுக்கியதை அறியாயோ!
பீரங்கி வேட்டுக்கு இனி ஒரு
பிஞ்சுடம்பும் வேண்டாம்
ராட்சத சூரியன்போல்
எங்கள் பூமிக்கு வா…

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-04 00:00

கருத்துகள்

கண்ணீரை மையாக்கி கவிதைதனை வடித்துள்ளார்rn கண்டதினை படித்தவரும் கண்ணீரைத் துடித்துவிடrnமண்ணீரம் ஆக்குகின்ற மறவாத கவிதையிதுrn மனங்கனிய வாழ்த்தகின்றேன வாழ்க அவரே rn rn

Share with others