கோழி.. இன்றைய சந்தை நிலவரம்
01.
கோழி
---------------
என் குழந்தைக்கு தினம்
ஓரிலவச முட்டையைக் கொடுத்து
பதிலுக்கு தனது அலகால்
எங்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறது
சேவல் இன்றி குப்பைகளை
தனதிறகால் அணைத்துக் கொண்டு
முட்டையிடும் நாத்திகக் கோழி.
02.
இன்றைய சந்தை நிலவரம்
---------------------------------------
அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவின்
இன்றைய சந்தை நிலவரத்தை பார்கின்றன.
மலிவு விலைப் பட்டியல்:
வெங்காய விலை கிலோ 80 ரூபாய்
துணை வேந்தர் விலை 1 கோடி
பல்கலைக் கழக பேராசிரியர் விலை 15
லட்சம்
கிராம நிர்வாகி விலை 5 லட்சம்
பேருந்து ஓட்டுனர் விலை 2 லட்சம்
மத்திய அமைச்சர் விலை 600 கோடி
ஜனநாயகத்தின் விலை 1.76 லட்சம் கோடி
விற்றப் பொருள் திரும்பப் பெறபடமாட்டாது
இப்படிக்கு நிர்வாகம்.
இச்சி... இச்சி... இப்பழங்கள்
எல்லாம் அழுகி நாற்றமெடுக்கின்றன
இனி இந்தப்பக்கமே வரக்கூடாது
சீனாவும் அமெரிக்காவும் திரும்பிசெல்கின்றன.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-01-01