களப்பிரர் வம்ச இளவரசி..போதிமரப்பதுமை
01.
களப்பிரர் வம்ச இளவரசி
------------------------------------
அவன் எழுதிவைத்த கவிதை
எங்கோ காணாமல் போய்விட்டது!
தேடித் தேடிப் பார்த்தான்
எங்கு விழுந்திருக்கும்?
அவன் மனசு உடைந்து விட்டது
ஒரு நிமிடத்தில்!
மீண்டும் தேடினான்
கிடைக்க வில்லை
வீட்டிற்கு வெளியே
வந்து பார்த்தான்
அவன் மடித்து போட்டவாறே
ஊமையாய் கிடந்தது
அவளை எதிர்பார்த்து!
அவளை நினைத்துக்கொண்டே
அவள் போகும் பாதையில்
போட்டதால் மறந்துவிட்டான்
அவளின் கொலுசு சத்தம்
அவன் மறைந்து கொண்டான்
மிதித்து விட்டுச் சென்றாள்
அவன் -எழுதிவைத்த- இதயத்தை
அடுத்தநாள் சுவற்றில் எழுதிவைத்தான்
அவள் அம்மாவுடன் வந்து
துப்பிவிட்டுச் சென்றார்கள்
சுவற்றின் மீது
அதற்கடுத்தநாள் எழுதிவைத்தான்
கவிதையை உடைக்கத் தெரியரியாதவர்கள்
உதைத்துவிட்டும் உமிழ்ந்து விட்டும்
செல்கிறார்கள் பாவம் !
02.
போதிமரப்பதுமை
-------------------------
போதிமரத்தால் செய்த சிம்மாசனமது
அமர்ந்தவுடன் வன்முறையைத் துண்டும்
பதுமையாய் போனது!
ஆயிரமாண்டுகளுக்குமுன் செய்த சிம்மாசனமது
அமர்ந்தவுடன் அரக்கனாகிறான் சிங்களன்!
இறக்குமதி செய்கிறான் போதிமரப்பதுமையை
புத்தன் பிறந்த மண்ணிலிருந்து
வேரோடு வெட்டி விற்கிறது
புத்தன் பிறந்த நாடு
சிங்களனுக்கு சிம்மாசனம் செய்ய!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-03