உணர்வாயா பெண்ணே?

பெண்ணென்று உனை எண்ணி
பேதையாகக் குனியாதே
அடுக்களைக்குள் அடைந்திருந்து
அவிந்து நீயும் எரியாதே
உனக்குள்ளே சக்தி உண்டு.
உணர்வாயா பெண்ணே1

மகவாக்கி மனிதராக்கி
மானிடத்தை வளர்க்கின்றாய்
மனங்களிலே அன்பு என்னும்
அமுதத்தை விதைக்கின்றாய்
அவனியிலே பெண்களெல்லாம்
அரசாளும் காலமிது
அடுப்படி தான் சொந்தமென்று
அவிந்து நீயும் எரியாதே

- பாரதி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

ஆழ்ந்தக் கருத்து கொன்ட அருமையான படைப்புக்கு பாரதிக்கு அன்பு வாழ்துக்கள்

Share with others