உடைந்த சிரிப்புகள்
------------------------

உன்
அழுக்குகளை
நீ மறைத்துக்
கொண்டாய்
நான்
அழகாய்
இருப்பதாகக்
கூறி...

மறைக்கப் பட்ட
உன்
உண்மைகளை
நானும்
மறக்கப் பழகிக்
கொண்டேன்...

சிரிப்புகளோடு
உன் கனவில்
நானும்
பறந்தேன்.....
சப்தமில்லாமல்
என் சிறகுகளை
நீ உடைத்தும்...

கற்பனைகளைக்
கொடுத்து
என் உணர்வுகளை
கொன்று
போனாய்.....

உடைந்த
என் சிரிப்புகளையும்
கிழிந்த என் வாழ்வையும்
இன்னும்
ஒட்டிக் கொண்டுதான்
இருக்கிறேன்
பிசு பிசுக்கும்
என் கண்ணீரில்...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-13 00:00

கருத்துகள்

அனுபவமா அல்லது கற்பனையா என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் கவிதையை மிக மிக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது உண்மை. வாழ்த்துக்கள்!

Share with others