என் புத்திக்குள்
என்
புத்திக்குள்
பழைய
மொந்தைக் கள்
புத்தியும் போய்
புத்தியின்
தொழிலும் போய்
நம நமத்த
பச்சைக் களிமண்
சுட்டுக் கலயமாக்கி
கலயமுடைந்து
கிழிஞ்சலாக..
காலம்
உணர்த்தும்
தடயமோ
தாழ்க்கும்
தாழிக்கலயமோ
நோக்கம்
எண்ணத்தின்
விஸ்தீரணம்
புதிய வானம்
வந்து தங்கும்
மரமல்ல
சிந்தைப்
பறப்பன்றி
இரண்டடியும்
நாலு அடியானும்
நமக்கில்லை
சொற்களின் சோக்கு
சுந்தரமல்ல
ஊடு பரவும்
சிந்தனையும்
புரிதலும்
வாழ்வின்
வழித்தடமும்
வீசும் தென்றலும்
வெள்ளை நிலவும்
மணக்கும்
மலருமல்ல
வாழ்க்கை
ஒரு
பருக்கை சோறும்
கிழிசலற்ற
மேல்த் துணியும்
நிறம்
பார்க்காத
இரத்தமும்
பயமற்ற
படுக்கையும்
இன்னும்...
என்
புத்திக்குள்
பழைய
மொந்தைக் கள்
புத்தியும் போய்
புத்தியின்
தொழிலும் போய்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00