பொய் மரியாதை .. மின்தொடர்வண்டி
01.
பொய் மரியாதை பூ
--------------------------
அந்த பயணத்தின் போது
நினைவு பறவைகள் பறந்து
நிகழ்வு மரங்களில் மாறிமாறி அமர்ந்து
என்னிருப்பை இழக்கசெய்தது
முட்டு சந்தொன்றில்
முட்டி நிற்பதன்ன
“மாப்ள எப்படி இருக்க”
ஆரம்பபள்ளி நண்பனின் அழைப்பு
ஒருவருகொருவர் விசாரிப்புகள்
அன்நாளைய இலங்கை வானொலி
இரவின் மடியிலான
இன்பத்தில் திளைத்திருக்கையில்
அவரவர் வேலை விசாரிப்பில்
பொய் மரியாதைகளை
பார்தது பழகி அனுபவித்து வெறுத்து
உண்மை நட்பிலான வார்த்தைகளில்
பொய் மரியாதை பூ
பூத்து விடக்கூடாதென நான்
பொய் சொல்லிவிட்டேன்
02.
மின்தொடர்வண்டி
-------------------------
கரையாத வெண்சுருட்டு
விரல்களிடையே அமர்ந்து
வாயிக்கும் கைக்குமிடையே
மீண்டும் மீண்டும் பயணிப்பதாய்
செங்கலபட்டு மின்தொடர்வண்டி
நாலவதாக இருக்கு மூன்றாவது நபரை
நகரச்சொல்ல
எழுந்து நீங்கள் நல்ல உட்காருங்க
குத்தல் பேச்சில் கோபாமாகி
எம்ஜிஆர் வேலை வேண்டாமென சொல்ல
வாக்குவாதம் முற்றி சணடையாய்
அசிங்கமாவதை கண்டு அமைதியானேன்
திங்கள் கிழமைகளில் சணடையும்
வெள்ளிகிழமைகளில் அமைதியும்
தொடர்வண்டி பயண விதிதான்
சண்டையே மறந்து போனாலும்
பெரியமனுசன்தானே நீ என
சொன்ன வார்த்தை
மனதுக்குள் உட்கார்ந்து குடைந்து
தலைக்கு சாயம் பூச
வேண்டுமா வேண்டாவா என அலைந்தது