உறவு ஒன்று புதிதாய் உருவாகும்
உருவங்கள் உணராமலும் கருத்தா¤க்கும்
வேறெவரும் உ£¤மைபெற உள்ளம் மறுக்கும்
எமக்கு மட்டும் சொந்தமானது
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவா¤ன்
ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும்
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்
விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பரிமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழ்க்கைத் தொடா¤ன்
அடுத்த காட்சி அரங்கேறும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க . . .
அப்பப்பா, என்ன உணர்வுப்பூர்வமான வரிகள்,
உண்மையான வெறுமை வெற்றிடமாய் இருந்தாலும், வேறு ஒன்றை வைத்து நிரப்பினாலும், வெறுமை அகன்று முழுமை பெற்றதாய் நினைவில்லை,
இருப்பினும்,
மேடையில் வாழ்க்கைத் தொடர்பான
அடுத்த காட்சி அரங்கேறும் . . .
அக்காட்சிக்குள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அனிச்சையாய் அகப்பட்டிருப்போம்,
நிழலும் நிதர்சனும் கலந்திருப்பதை கற்றுகொடுத்த கத்துக்குட்டிக்கு கனிவான வாழ்த்துகள், மேலும் பலவற்றை கற்றுக்கொடுங்கள் கத்துக்குட்டியே.