ஆற்றாமைச் சீற்றப்பா ஐந்து!
-------------------------------------------------

ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றாய் ! – பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனென
பேருனக்கேன் சீச்சீ பிழை !

எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின்
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! – நல்லார்
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி
அமிழா திருக்கும் அமர்.

ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! – ஏய்த்திடுவாய் !
சீச்சீ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !
தீச்செயலில் தில்லி திளைத்து.

கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! – திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப்
பங்கேற்றார் தில்லியுடன் பார் !

ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில்
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! – ஈடு
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே
உலகிலறம் ஓயந்ததென ஓது.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-29 00:00

கருத்துகள்

வணக்கம்.

ஆற்றாமைச்சீற்றப்பா ஐந்து! என்ற தலைப்பிலான என் ஐந்து வெண்பாக்களை வார்ப்பில் இடம்பெறச் செய்திருக்கிறீர்கள். நன்றி.
என் பெயர் தமிழநம்பி.
மூன்றாம் எழுத்து 'ழ' மெய்யெழுத்தன்று. உயிர்மெய்யெழுத்தாகும்.

அன்பு கூர்ந்து திருத்தி விடவும்.
நன்றி.

Share with others