உன்னை நோக்கியதாய்...
மலர்கள்
தூவிய
மரங்கள்
நிறைத்த சாலையில்
நீ,
வருகிறேன் நான்.
உன்னை
கண்டதும் ஏனோ
என் இதயத்தில்
ஆயிரம்
பட்டாம் புச்சிகள்.
ஒரு வார்த்தை
கூட கதைத்ததில்லை,
நான்
இதுவரை
உன்னிடம்.
ஆனால்
ஏன்
ஓட்டுமொத்த
இதயமும்
உன்னால் மட்டுமே
நிரம்பியிருக்கிறது.
பூக்களை
சேரும் வண்டுகளாய்
உன்னை நோக்கியதாய்
எனது
பயணம்.
உன் பார்வை
படும்
துரத்தில்
நான்.
வெறும்
அறிமுகத்துகான
புன்னகை மட்டுமே
உன்னிடமிருந்து
எனக்கு.
ஆனால்
பெண்ணே
அது மட்டுமே
வானத்துக்கும்
பூமிக்குமாய் குதிக்க
போதுமானதாக
இருந்தது.
தொட்டுவிடும்
துரத்தில்
நீ இருந்தும்கூட
இதயத்தின்
படபடப்புகளை
தாண்டி
வார்த்தைகள்
வரவில்லை
வெறும்
புன்னகையோடு
மட்டும் முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டது
அன்றைய மழைக்கால
சந்திப்பு.
புன்னகையும்
தாண்டி
பல்வேறு தேடல்கள்
உன்னில் எனக்கு,
விடைபெற்ற
நேரத்தில் இருந்து
தவிக்கிறது
மனது.
-சுதாகரன்
intha kavithai romba nalla irukuthu...Nan oru indian, neelan endral anaivarukum theiyum tamil natil. Ungal kavithayay enathu puthakathil pirasurika mudiyuma? Ungal anumathi thevai...(padithu rasithavai endra paguthiyil).