- துளசி
கொஞ்ச நாள் சேகுவேரா
அழகு தொப்பியும்
குறுந்தாடியும்
கொள்ளை கொண்ட நாள்கள் அவை
அப்புறம் மாவோ
கிறுகிறுக்க வைத்தவை
அழுக்குக் காக்கியும்
கூர்மைக் கண்ணும்
கீழை மார்க்சியமும்.
சிறிது நாள் மார்க்குவெஸ்
சில நாள்கள் குந்தர் க்ராஸ்
அப்புறம் சட்டென
ஒரு நாள் பாரதி
வீரக்கொம்பூன்றி
செல்லச் செல்லம்மாளோடு.
அன்னையும் அரவிந்தரும்
அலங்கரித்தது
பின்னொரு நாள்.
சில நாள் சாமி
சில நாள் கோயில்
சில நாள் குடும்பம்
அலங்கரித்த எவரும்
அதிக நாள் நீடித்ததில்லை.
எப்போதும்போல்
சுகமாய் இருக்கிறது
சுத்தமாய் இருக்கும்
டெஸ்க்டாப்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
இந்தக் கவிதையின் பளீர் வெடிப்பே அந்த்க் கடைசி வரியில் இருக்கிறது. அதையே தலைப்பாய் வைத்து சுவாரசியம் இல்லாமல் செய்து விட்டீர்களே!