சிலேடை வெண்பாக்கள்!- (II)
----------------------------------
பானையும், பலகாரமும்!
தட்டித் தழலிடலால் ஆவென்னும் வாயுளதால்
சுட்டிடப்பொன் வண்ணமாய் தோன்றுதலால் -அட்டியின்றி
மண்பானை வாசப் பலகாரம் நேராக்கிப்
பண்பாய் தமிழில் படி!
பனியாரமும், புத்தகமும்!
புரட்டுதலால் பல்சுவை காணுதலால் போய்ஓர்
திறண்டநூல கத்துள் சேர்ந்தும் -இருத்தலால்
உண்ணும் பனியாரம் புத்தகத்தை ஒக்குமெனப்
பண்பாய் தமிழில் படி!
விண்ணும், கிணறும்!
சந்திர சூரியர் தோன்றுதலால்@ தண்ணீரைத்
தந்தேநம் தாகம் தணித்தலால் -சிந்தித்தே
விண்ணும்நீர் ஊற்றுக் கிணறும்நேர் என்றாய்ந்தே
பண்பாய் தமிழில் படி!
-அகரம்.அமுதா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-25