சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து..

நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து

கேட்டால் கிடைக்குந்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறதல்

பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்

கரு சுமந்து
குழந்தைத் தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

ஆண்களுக்கு கருப்பைதான் இல்லாமல் போய்விட்டது..
இதயம் இல்லாமலா போய்விட்டது....?
உங்களைச் சுமப்பதற்க்கு.....

Share with others