மூன்று வருடங்களாகின்றன
ப்ளஸ் ஒன் படிக்கும் முத்துபாண்டி
என்னைபோல அம்மா பிள்ளையாகவே இருக்கிறான்
இங்கேயும் தெருமுக்குகளில்
பள்ளிவிடும் நேரத்தில் நிற்பதற்கென்றே இருக்கிறார்கள்
ஐந்தாறு பேர்
எல்லா ஏரியா பெண்களும்
ஒரே மாதிரியே வெட்கப்படுகின்றனர்
கைலியும் முள்ளுதாடி முகமுமாய்
வில்லாபுரத்திலும் "தனுஷ்"ரசிகர்கள் உள்ளனர்
தீபாவளிக்கு முந்திய இரவு
இங்கே யாரும் கோலமிடுவதில்லை
கோனார்மெஸ் புரோட்டாவும் கிடையாது
பழையதெரு நண்பர்கள் டூவீலரில்
வேலைக்கு போகின்றனர்
காதலிகளின் திருமண போஸ்டர்களை கடந்து.
தியாகு
கால்களை இழந்த மனிதனைப் போல
கரையொதுங்கிக் கிடக்கிறது!
இனி
சொந்தமாய் ஒரு திசையில் நகர்வது
சத்தியமில்லை!
வேறு வண்டிகளில் பயணிக்கலாம்.
இல்லையெனில்
துடுப்புகளோடு எவரேனும்
வரவேண்டும்—
புதிய பயணத்தைத் தொடங்க!
மதிபாலன்,இந்தியா
=======
கனடாவில் நான்!
கண்டத்தில் அம்மா!
கனக்கிறது இதயம்
மட்டும் அல்ல,
இங்குள்ள
பயன் இல்லாப்
பணமும்தான்!
பறந்து வருவதற்குள்
இறந்துபோனாள் அம்மா!
பணம் அழுகவில்லை,
இன்னமும்..
அவளின்
பிணம் அழுகியது!
- பா.ஸ்ரீராம். திருச்சி. தமிழ்நாடு
மழலையின் இழப்பு சிறுமி!
சிறுமியின் இழப்பு கன்னி!
கன்னியின் இழப்பு திருமதி!
திருமதியின் இழப்பு கைம்பெண்!
இளமையின் இழப்பு முதுமை!
இழப்போ இழப்பு!
செந்நெல்லும் செங்கரும்பும் விளையும்
செழுமையான நிலத்தில்
செங்கல் விளைவிப்பதால்
சீர்மிகு வேளாண்மைக்குப் பேரிழப்பு!
அடுக்குமாடிகளின் அடியில் சிக்கி
மூச்சடங்கிப்போன வேளாண் நிலங்களின்
உரிமையாளருக்கோ நிரந்தர இழப்பு!
அங்கொன்றும் இங்கொன்றும் என்பது
அக்காலமே மாறிப்போச்சு!
ஆளுக்கொரு வாகனம் என்பதால்
ஆகாய வளிமண்டலமே அசுத்தமாச்சு!
துரித உணவகங்களால்
தூய உணவு வகைகள் இழப்பு!
இழப்பில்லையேல் துளிர்க்காதோ
புதிய உயிர்ப்பு?
- செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு