இழக்க நினைக்கும்
இவனுக்கு
இடையூறான
இந்தக் காதலைத்
துறப்பதற்கு
துணிவற்ற நெஞ்சம்...
உந்தன்
மனதில் தோன்றும்
மெளனங்களின்
மொழியினைக் கூட
என் இதயத்திற்கு
மொழிபெயர்த்துக்
கொடுக்கும்
உன் கண்களின்
அசைவிற்கு
இசையா மனம்
இவனது இல்லை...
உந்தன் காலடி
தடம் பட்ட
தரையினைத்
தழுவிக்கொள்கிறேன்...
உனது ஓசையினை
பதிவு செய்து வைக்க
என் வீட்டு சுவர்களுக்கு
கட்டளையிட்டுள்ளேன்...
என்ன தவம்
புரிந்தேனும்
உனை அடையும்
வேட்கை இல்லை
இவனுக்கு எனும்போதும்
இவள் நிரம்பிய
இதயத்தில்
இனி எவருக்கும்
இடமில்லை என்பது
இவன் முடிவு...
-நித்திலம் ரமேஷ், இந்தியா
உள்ளம் துடிக்கிறதே
அதை காகால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே.
மணிவண்ணன், இந்தியா
உன் கண்கள் மட்டுமே
அடிக்கடி பொய் சொல்லுகிறது
என்னை பார்த்துக்கொண்டே பார்க்க வில்லை என்று
உருகி போனேன் !
நீ என்னை பார்த்து பார்த்தே !
நான் உருகி போனேன்
உன் அனல் போன்ற !! பார்வையினால் !!!
இதற்கு தானா!
இதற்கு தானா சிறை பிடிக்க பட்டேன்
என்னை மட்டுமே ரசிக்கும் கண்கள்
என்னை பத்தியே பேசும் உதடு
ஒரு இடத்தில் நிற்காத கால்கள்
விட்டு விட்டு துடிக்கும் உன் இதயம் இதற்கு தானா
நினைக்க மறக்காதே!
நீ உறங்கும் முன் நினைக்க மறக்காதே !!
வந்து விடுவேன் உன் கனவில்
என் உறக்கத்தையும் விட்டு விட்டு !!!
என் தேவதை !
காத்து இருக்கிறேன்
உன் வருகைக்காக
நீ என்னவே என்னை கண்டு பதுங்கிக்கொள்கிறாய்
என் மனமோ நீ இங்க தான் இருக்கிறாய்
என்று செல்கிறது என் இதயமும் படபடக்க தொடங்கியது
திடீர் என்று காட்சி அளிக்கிறாய் தேவதையாக !!!
-மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
பொய்மைகள் கோலோச்சும்
இருண்ட பூமியில்
உண்மையைத் தேடியலைந்து
எனக்குள்ளே சிதைகின்றேன்..
நேற்றைய இனிய வாழ்வும்
இன்றைய சூனியமும்
நடைப்பிணமாக்கிவிட
நம்பிக்கையற்ற உலகில்
வெளிச்சத்தைத் தேடியபடி..!!!
துர்க்கா நிலா, இலங்கை
தீக்குளித்தது போதும்!
காதல் கனவுகள் பற்றி எரிய
தீக்குச்சிக் கிழித்துப்போட்டவர்களின்
கவிதைக்குள்
கவிழ்ந்து கிடந்ததெல்லாம் போதும்.
உன் வாழ்க்கையின்
வானவில்லைக் கைப்பற்ற
வானத்தை பிடித்து உலுக்கிவிடு.
இந்த ஜிகினா நடசத்திரங்கள்
உதிர்ந்து விழுந்திடட்டும்.
உனக்கு மட்டுமே
சொந்தமான நிமிடங்களை
இந்த "கைபேசிகளில்" தொலைத்து விட்டு
கலங்கி நிற்கலாமா?
நாலு சுவர்களுக்குள்
வர்ணப் பிழம்பாய் குமிழியிட்டு நின்ற
உன் தனிமைப்பிம்பம்
தாறுமாறாய் உடைந்து நொறுங்குவதோ?
உன் இமை சிம்மிடல்கள் கூட
உன் சோழி குலுக்கிய இனிய
சிரிப்பொலிகள் கூட
எல்லோர்கைகளிலும்
வியாபாரம் ஆனதே.
மெல்லிய காதலின் சல்லாத்துணியை
வானமெல்லாம் தெரியும்
டிஜிடல் கொடியில் விரித்து
காயப்போட்டு விட்டு
எதற்காக காத்துக்கொண்டிடுக்கிறாய்?
அதோ
பட்டாம்பூச்சிகள்
லட்சக்கணக்காய் உன்னை நோக்கி
பறந்து வருகிறதே
அதன் சிறகுகள் கொண்டு
உன்னை மூடிக்கொள்.
காதலுக்கு
காதலே தான் நிர்வாணம்.
காதலே தான் ஆடைகளும்.
ஆசைகளை உடுத்தி
ஆசைகளை களையும்
ஆவேசங்களையெல்லாம்
களைந்து எறி.
வெறும் மனத்தை
தூய அன்பு கொண்டு மூடிக்கொள்.
சின்ன சலனங்களில்
சின்னாபின்னம் ஆவது அல்ல காதல்.
உன் விசுவரூபத்தை
உன்னிடமே காட்டி நிற்கும்
பேரன்பின்
ஒரு மகா நிர்வாணம் அது.
-ருத்ரா
புதிதாய் ஏதும் சொல்லவில்லை
பலரும்-
புதிரென்றார்கள் பெண்மனதை..
அது,
பொன் போன்றது-
மதிப்பில்,
பூ போன்றது-
குணத்தில்..
அது,
வீரிய விளைநிலம்-
அன்பை விதைத்துப் பார்,
அறுவடை செய்
அன்பின்
அமோக விளைச்சலை..
இனி காண்
பெண்ணின் மனதை-
அன்பின் விளைநிலமாய்...!
-செண்பக ஜெகதீசன்