பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-12-26 00:00
வீழாது இருப்பதற்காய்
விழுதுகள் விடுகின்ற
ஆலிற்கு இணையான
மெழுகு மரமே!
விழுதுகள் விடுகின்ற
ஆலிற்கு இணையான
மெழுகு மரமே!
இருளை உண்பதும்
இறுதியில் உணவாவதுமாய்
அறிவார்ந்த மனிதனின்
அதிசய படைப்பு நீ...
வயல்வெளிப் பனைகளில்
தூக்கனாங் கூடுபோல்
வெண்பனை உன்னிலும்
தீபத்தின் கூடுகள்...
ஒருகண் ஆயினும்
திருகண்;
உனக்கது
ஒற்றைக்கண் ஆயினும்
நெற்றிக்கண்;
பின்பேன்
விழியில் திவளைகள்?
விழிநீரால் உடல் கழுவி...
விழிநீராய் உடல் உருகி...
வழிந்தபடி நீ!
அனுமனுக்கு இட்ட தீ
இலங்கையைக் கொண்டது...
உனக்குநாம் இட்ட தீ
இருளை வென்றது...
இருட்கடல் விடுத்து
ஒளிக்கரை நாடும்
விட்டில் கலங்களை
மீட்டிடும் விளக்கமே!
கலங்களை எரித்துக்
கரிக்கட்டை யாக்கிடும்
கலங்கத்தைச் செய்வதன்
காரணம் என்னவோ?
விட்டில் பூச்சியை
விரும்பி உண்பதால்
தென்றல்உன் தீபச்சிரம்
கொய்வதில் பிழையில்லை.
அகரம் அமுதன்
- அகரம் அமுதன், 2013-12-26
(தி)யாகம்
மெழுகு வர்த்தி எரிகின்றது
மெழுகிங்கு கரைகின்றது
எழும் தீபம் ஒளிர்கின்றது
இருளெங்கோ ஒளிகின்றது
இது(தி)யாகம் புரிகின்றது
இதன் தியாகம் புரிகின்றது
இது தானே வழிகின்றது
இது அன்பின் வழிநின்றது
மெழுகு வர்த்தி எரிகின்றது
மெழுகிங்கு கரைகின்றது
எழும் தீபம் ஒளிர்கின்றது
இருளெங்கோ ஒளிகின்றது
இது(தி)யாகம் புரிகின்றது
இதன் தியாகம் புரிகின்றது
இது தானே வழிகின்றது
இது அன்பின் வழிநின்றது
சு.அய்யப்பன்,
109,திருவள்ளுவர் நகர்
- சு.அய்யப்பன், 2014-03-23